சரத் வீரசேகரவின் அரசியல் தீர்மானம்
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தான் எடுக்கவுள்ள அரசியல் தீர்மானம் தொடர்பில் எதுவும் பேச தயராக இல்லை என தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நேற்றிரவு(4) கலந்து கொண்ட ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு என்ன செய்ய வேண்டும்? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை.
தற்போதைய அரசாங்கம்

பொதுமக்கள் உணவு, எரிபொருள், எரிவாயு பற்றாக்குறைகளுக்கு தீர்வு கோரும் போது அரசாங்கம் அவர்களுக்கு இலவசமாக காணி வழங்கப்போவதாக அறிவிக்கின்றது. பொதுமக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் விளங்கிக்கொள்ளவில்லை.
அதேநேரம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதையோ, 21ம் திருத்த சட்டம் நிறைவேற்றப்படுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் தீர்மானம்

எதிர்வரும் நாட்களில் நான் அரசியல் ரீதியான முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளேன். இப்போதைக்கு அது குறித்து மேலதிகமாக நான் பேச விரும்பவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri