தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கட்சித் தாவலுக்கு இடமில்லை : ஹரினி அமரசூரிய
தேசிய மக்கள் சக்தி அரசாங்க ஆட்சியின் கீழ் கட்சித் தாவல்களுக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாலபேயில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நபருக்கு கட்சி மாறுவதற்கு அனுமதி உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு கட்சியிலிருந்து மக்கள் வாக்குகளில் தெரிவாகி பின்னர் கட்சி மாறுவதற்கு இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
கட்சி மாற வேண்டுமாயின் வேறும் கட்சியில் போட்டியிட்டு மக்களின் ஆணையின் அடிப்படையில் தெரிவாக வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நீதிமன்றின் உதவியை நாட நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு வழங்கப்படும் வரையில் குறித்த இருவரும் மக்களின் பணத்தை விரயமாக்கியமை தொடர்பிலான பொறுப்பினை எவரும் ஏற்கவில்லை என ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |