போதையில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய மூன்று சந்தேகநபர்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 37 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பாலையூற்று பகுதியில் மதுபோதையில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயங்களுக்குள்ளான நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பாக உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய மூவரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முதலாம் ஆண்டு திருமண நாள், தனது மகன்களின் முகத்தை காட்டிய விக்னேஷ் சிவன், நயன்தாரா- கியூட் போட்டோஸ் Cineulagam
