கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் கவலையான செயற்பாடு! பகிரங்க குற்றச்சாட்டு

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Cabinet Imran Maharoof Eastern Province
By Badurdeen Siyana May 10, 2023 12:18 PM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in அரசியல்
Report

''கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் முஸ்லிம் விரோதப் போக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது'' என திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (10.05.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு மாகாணம் கிழக்கு மாகாணமாகும். இந்த மாகாண முஸ்லிம்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையைத் தருகின்றது. 

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் கவலையான செயற்பாடு! பகிரங்க குற்றச்சாட்டு | Imran Makhroob On Anti Muslim Sentiment

கிழக்கு மாகாண சபை

கடந்த காலங்களின் இந்த அமைச்சுக்களின் செயலாளர்களாக எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவோர் இருந்தனர்.

எனினும் தற்போது தகுதியுள்ளோர் இருந்தும் எந்தவொரு முஸ்லிம் அதிகாரியும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இல்லை.

கிழக்கு மாகாண சபையில் பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் அதிகாரசபைகள் 5 இருக்கின்றன.

இன பிரதிநிதித்துவம்

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் கவலையான செயற்பாடு! பகிரங்க குற்றச்சாட்டு | Imran Makhroob On Anti Muslim Sentiment

கடந்த காலங்களில் இவற்றின் தவிசாளர்களாக எல்லா இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவோர் இருந்ததுடன் தற்போது எந்தவொரு சபையிலும் முஸ்லிம் தவிசாளர்கள் இல்லை.

அதேபோல இந்த சபைகளின் செயலாளர் அல்லது பொது முகாமையாளர் பதவிகளில் கடந்த காலங்களில் எல்லா இன உத்தியோகத்தர்களும் இருந்தனர்.

தற்போது இவை எதிலும் முஸ்லிம் அதிகாரிகள் இல்லை. இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளில் சுமார் 40 வீதமானவை முஸ்லிம் முன்பள்ளிகள்.

எனினும் கிழக்கு மாகாண முன்பள்ளி பணிப்பாளர் சபையில் எந்தவொரு முஸ்லிம் உத்தியோகத்தரும் இல்லை. இவை அனைத்தும் கிழக்கு மாகாண ஆளுநரால் செய்யப்படும் நியமனங்களாகும்.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் கவலையான செயற்பாடு! பகிரங்க குற்றச்சாட்டு | Imran Makhroob On Anti Muslim Sentiment 

கடந்த காலங்களில் இருந்த ஆளுநர்களால் சகல இனங்களையும் சமப்படுத்தும் நிலையில் நியமனங்கள் வழங்கப்பட்டன எனினும் தற்போதைய ஆளுநர் முஸ்லிம் விரோதப் போக்குடன் செயற்பட்டு முஸ்லிம் சமுகத்தைப் புறக்கணித்து வருகின்றார்.

கோட்டாபய ராஜபக்சவின் இனவாதக் குழுவைச் சேர்ந்த இந்த ஆளுநர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியிலும் அதே இனவாத வழியிலேயே பயணிக்கிறார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவர்கள் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் அவர்கள் குறியாக இருக்கிறார்களே தவிர இவ்வாறான முஸ்லிம் உரிமைகள் விடயத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லல் 

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தின் கவலையான செயற்பாடு! பகிரங்க குற்றச்சாட்டு | Imran Makhroob On Anti Muslim Sentiment

மேலும், கிழக்கு மாகாணத்தின் ஒரே அமைச்சரான நசீர் அஹமட் முஸ்லிம்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கூடிப் பேச வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது அவராவது இந்த முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்பில்  ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்‘‘ என்றுள்ளது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US