பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்
தெஹ்ரீக்-இ-தலிபான் தாக்குதல் விசாரணைக்காக பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் முன்னிலை ஆனார்.
பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கம் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பெஷாவர் நகரில் உள்ள இராணுவ பாடசாலைக்கூடத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 132 சிறுவர்கள் உட்பட 147 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதல் தொடர்பாக அந்த நாட்டின் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்களின் உதவியோடு தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கங்களுடன் பிரதமர் இம்ரான்கான் அண்மையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் முடிவில் தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்தினர் ஒரு மாத காலத்துக்கு சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,