இலங்கையின் நிலையே பாகிஸ்தானிலும் ஏற்படும்: இம்ரான் கான் எச்சரிக்கை
இலங்கையில் பொருளாதார மந்தநிலையால், 2ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிலையே பாகிஸ்தானிலும் ஏற்படும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் பொருளாதார மந்தநிலையால் அந்நாட்டு மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கொந்தளிப்பால் ஆட்சி மாற்றம்
அந்நாட்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன. ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து, போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
மக்கள் கொந்தளிப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர், பிரதமராக ரணில் பதவியேற்றார். பின்னர், அவர் இலங்கையின் ஜனாதிபதியானார்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியகத்திடம் இருந்து இறுதியாக ஒரு கடன் தொகையை பாகிஸ்தான் பெறவுள்ள சூழலில், பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில், மக்கள் இலங்கையை போல தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |