இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு - லாகூர் ஆர்ப்பாட்ட பேரணியில் சம்பவம் (Video)
இரண்டாம் இணைப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த, நபர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் குஜ்ரன்வாலா நகரில் பாகிஸ்தான் தெஹ்ரிகி இ இன்சாப் கட்சியின் வரவேற்பு முகாமில், இம்ரான் கான் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் சம்பவத்தில் அவரது கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் சிந்து மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பைசல் ஜாவீட்டும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இம்ரான் கானை கொலை செய்யும் நோக்கில் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட கூறப்படும் நபர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியின் போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று நடந்த இந்த சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக இம்ரான் கானின் பீ.டி.ஐ. கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
எனினும் எவரும் கொல்லப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு இம்ரான் கானின் பாதம் அல்லது காலில் பட்டதா என்பது தெளிவில்லாத போதிலும் அவருக்கு ஆபத்து ஏதுவுமில்லை என அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
An attempt has been made to kill Imran Khan, the shooter was not an ordinary person, it was a trend shooter.
— ?PTI?قرثم?≼≽ (@Qursum12) November 3, 2022
Let's tell the nation that the red line has been crossed.#خان_صاحب_ہماری_ریڈ_لائن pic.twitter.com/fmu3ky38ps
70 வயதான இம்ரான் கான் துரிதமாக தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.