கிண்ணியாவில் விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் யார்? நாடாளுமன்றத்தில் வெடித்த பெரும் சர்ச்சை
விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் மொட்டுக் கட்சிக்காரர், உங்கள் கட்சிக்காரர் என்பதாலா அனுமதி வழங்கினீர்கள் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவிடம்(Nimal Lanza) நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்(Imran Mahroof) கேள்வி எழுப்பினார்.
இன்று (25) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இந்த கேள்வியை எழுப்பினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நேற்று நாடாளுமன்றத்தில் என் மீது பல பொய்க் குற்றச்சாட்டுகளை இராஜாங்க அமைச்சர் முன்வைத்தார். விபத்து ஏற்பட்ட படகுக்கு அனுமதி வழங்கிய விடயத்தில் என்னை சம்பந்தப்படுத்திப் பேசினார்.
அவர் கூறியது போன்று எனக்கு சம்மந்தம் இருப்பின் அன்றைய தினம் எனது வீடே பொதுமக்களால் தாக்கப்பட்டிருக்கும்.இதிலிருந்தே இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற உண்மை விளங்கும்.
அத்துடன் விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் எனது உறவினர் என்ற இன்னொரு பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். படகின் உரிமையாளருக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. உரிமையாளரின் சகோதரர் அலி நியாஸ் பொதுஜன பெரமுனவின் கிண்ணியா நகரசபை வேட்பாளர்.
அவ்வாறு எனில் இராஜாங்க அமைச்சர் அவரின் கட்சிக்காரருக்கு அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு அவரே பொறுப்பு என நான் கூறவா ? இந்த விபத்து ஏற்பட்டதால்தான் இன்று குறிஞ்சாக்கேணி பாலத்தைப் பற்றிப் பேசப்படுகிறது.
ஆனால் நான் கடந்த ஜூலை மாதம் இதன் அபாயத்தை உணர்த்தி நான் அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது அதனைக் கேலி செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் சொல்லி அவ்வாறு அலட்சியமாகப் பதில் அளித்தாரோ தெரியாது.
கேள்வி எழுப்பி நான்கு மாதங்களாகின்றன.இதுவரை மாற்றுப் பாதை தரவில்லை.பாலம் கட்டி முடிந்த பின்னரா அல்லது இன்னும் பல உயிர்கள் போன பின்னா மாற்றுப் பாதை வழங்குவீர்கள்?
அத்துடன் இந்த பாதை தவிர இன்னொருமொரு பாதை நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் நிஹார் ஆகியோரால் ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த பாதைக்கு அனுமதி வழங்கியது யார்? ஆறு மாதமாக பாதை சேவையில் ஈடுபட்டும் அது பற்றி நான் நாடாளுமன்றத்தில் சொல்லியும் ஏன் அதைக் கண்காணிக்கவில்லை? மாற்றுப்பாதை இல்லாமல் பாலத்தை உடைக்க அனுமதி வழங்கியது யார் தவறு எனக் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam