பாப்பரசரின் உடல் நிலை குறித்து வத்திக்கான் வெளியிட்ட தகவல்
பாப்பரசர் பிரான்சிஸ் (Pope francis) உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து தற்போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.
சுவாச செயற்பாட்டில் மேம்பாடு
கடந்த வெள்ளிக்கிழமை சுவாசக் கோளாறு காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து அவர் மீண்டு வந்ததாகவும், நிமோனியாவில் இருந்து அவர் மீண்டு வருவதால் அவரது சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
எனினும் வைத்தியர்கள் நேற்று வழங்கிய தகவல்களின் படி அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |