நாட்டிற்குள் காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது: சஜித் பிரேமதாச - செய்திகளின் தொகுப்பு (Video)
நாடு எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) உரையாற்றுகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் அரசியல் மாற்றம் மிகவும் அவசியமானது. தொடர்ந்து, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
மேலும், புதிய ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என திடமாக நம்புவதாகவும் நாட்டிற்குள் காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.
அரசியலமைப்புக்கு உட்பட்டே டலஸ் அழகப்பெருமவும் தாமும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தோம். புதிய யுகமொன்றை நோக்கிய நகர்வாகவும், புதிய கலாசாரமாகவும் புதிய வேலைத்திட்டமாகவும் ஒரு அடி பின்வைத்து தாம் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,





அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
