ராஜபக்சக்களைக் கூண்டோடு சிறையிடுங்கள்: ரணிலிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கும் ராஜபக்சக்களே காரணம் எனவே ராஜபக்சக்கள் அனைவரையும் சிறையிடங்கள் என ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
"இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களிலும் ராஜபக்சக்கள் தொடர்புபட்டுள்ளனர் என்று 'சனல் 4' தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, ராஜபக்சக்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ராஜபக்சக்கள் மீதான குற்றச்சாட்டு
மேலும் இலங்கையை மாத்திரமல்ல ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் 'சனல் 4' வெளியிட்டுள்ள காணொலியை நிராகரிக்க முடியாது.உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை கட்டாயம் வேண்டும்" - என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

"2019இல் மக்களைக் கொன்றுவித்து ஆட்சியைப் பிடித்த ராஜபக்சக்கள், கடந்த வருடம் (2022) மக்களைப் பட்டினியால் சாகடித்து ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று கனவு கண்டுள்ளார்கள்.ஆனால், வீறுகொண்டு எழுந்த மக்கள், ராஜபக்சக்களைக் கூண்டோடு பதவிகளிலிருந்து விரட்டியடித்தார்கள்" - என பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் , "சகல விதமான ஊழல் - மோசடிகளிலும் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளனர். எனவே, ராஜபக்சக்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பியே தீர வேண்டும்" - என அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri