கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அறிவுறுத்தல்
கோவிட் தொற்று பரவுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மாலை 6 மணிக்குப் பிறகு மாகாணத்தின் அனைத்து நகரங்களிலும் வியாபாரத் தளங்களை மூடுவதற்கான தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், மாலை 6 மணிக்குப் பிறகு மக்கள் நகரங்களுக்குள் நுழைவதை தடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ள அவர், மாவட்ட எல்லைகளுக்கு இடையில் தடுப்புகளைப் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
