அரிசிக்கான நியாயமான விலை: இறக்குமதியாளர்கள் சங்கம் விசேட கோரிக்கை
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரியை 15 ரூபாவினால் குறைத்தால் சில்லறை விலையை நியாயமான முறையில் தீர்மானிக்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை குறைந்தது 220 ரூபாவிற்கு வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அரிசி இறக்குமதிக்கான வரையறைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், வரிகள் ஏதும் குறைக்கப்படவில்லை. இறக்குமதி செய்யப்படும் அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு வரும்போது, கிலோவுக்கு 8 முதல் 10 வீதம் வரை செலவழிக்க நேரிடும்.
டிசம்பர் மாதம் 9ஆம் திகதி
இதேவேளை, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 440 மெட்றிக் தொன் அரிசியை தனியார் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அரிசிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தால் குறைத்தால் சில்லறை விலையை நியாயமான முறையில் தீர்மானிக்க முடியும்.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.
இறக்குமதி செய்யப்படும் அரிசியை துறைமுகத்தில் இருந்து விரைவாக விடுவிப்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |