இறக்குமதி தேங்காய் எண்ணெய்யில் சந்தேகம் வேண்டாம்: உறுதியளித்த சுகாதாரத்துறை
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யும் போது, உணவுப் பரிசோதகர்களால் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுங்கப் பரிசோதனை
சுங்கப் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வியாபாரத்தளங்களில் விற்பனை செய்யப்படும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்து தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொள்வதாக உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் பெறப்படும் தேங்காய் எண்ணெய் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை எனவே இறக்குமதிகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், இறக்குமதி தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பாதுகாப்பானது உபுல் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, இறக்குமதி தேங்காய எண்ணெய்யின் தரம் தொடர்பில், அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் சந்தேகம் எழுப்பப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |