நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து பின்வாங்கும் 30ற்கும் மேற்பட்ட அரசியல் தலைமைகள்
முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தீர்மானித்துள்ளனர் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானம் எடுத்தவர்களில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்களான அலி சப்ரி, பந்துல குணவர்தன, சமால் ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன உள்ளிட்ட பலரும் இவ்வாறு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சிலர் தேர்தல் அரசியல்விட்டு முழுமையாக விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்னர் என தெரிவிக்கப்படுகின்றது.
தேசியப் பட்டியல்
சிலர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக பலர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |