காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் மற்றும் டெங்கு நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக பதிவாகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இரு நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு நோய்களிலும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்பன ஒரே மாதிரியான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதனால், நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தாமாக ஒரு முடிவுக்கு வராமல் விரைவில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இது தவிர, தற்போது கோவிட் தொற்று மற்றும் டெங்குவின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், தவறாக நோயைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
