புலம்பெயர் தமிழர்களிடம் வடக்கு, கிழக்கிலிருந்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 1947 நாட்களாக தொடர்ந்தும் நீதிக்காக போராடி வருகின்றனர்.
எழுச்சி போராட்டம்
இந்த நிலையில் பிரான்ஸ் நகரின் பரிஸ் தலைநகரில் நீதிக்காகவும் உரிமைக்காகவும் எழுக தமிழா என்ற தலைப்பில் ஒரு எழுச்சி போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இந்த போராட்டத்தினை தமிழ் உணர்வுள்ள புலம்பெயர் உறவுகள் ஒழுங்கு செய்துள்ளனர்.
குறித்த போராட்டம் எதிர்வரும் ஜுன் 22ஆம் திகதி பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை நடத்தப்படவுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதேவேளை அனைத்து புலம்பெயர் தமிழர்களும் இந்த எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 3 மணி நேரம் முன்
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது
காளி கோயிலை இடித்த ஹிஸ்புல்லா! சஹ்ரானை சந்தித்து ஒரு மாதத்தில் குண்டு வெடிப்பு - குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஈரோஸ் அமைப்பு