சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறும் முக்கியஸ்தர்கள்
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டார்.
மேலும், 09/21 இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு புறப்பட்டார்.
அதன் பிரகாரம் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னதாகவே சமந்த பத்ர தேரர் தென் கொரியாவை நோக்கிப் பயணப்பட்டிருந்தார்.
நாட்டிலிருந்து வெளியேறிய நாமல் மனைவி
மேலும், இத்தே கந்தவைச் சேர்ந்த சத்தாதிஸ்ஸ தேரர் 09/22 ஆம் திகதி நள்ளிரவு 12.50 மணியளவில் Cathay Pacific Airlines விமானமான CX-610 இல் ஹொங்கொங்கிற்குப் புறப்பட்டார்.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் 09/22 அன்று காலை 03.30 மணியளவில் Emirates விமானமான EK-649 இல் டுபாய் நோக்கிப் புறப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |