அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இவ்வருடம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டிப்பரீட்சைகள்
எதிர்வரும் நாட்களில் அதற்கான போட்டிப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதுடன், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் இந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடத்திட்டங்களை திருத்தியமைத்து கல்வி முறையில் புதிய மாற்றமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் எதிர்காலத்தில் தரம் 09 இல் தேசிய மட்டத்திலான பரீட்சையொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் பிள்ளைகள் தமது விருப்பத்திற்கேற்ப கல்வி சார் துறைக்கோ அல்லது தொழிற்கல்வி துறைக்கோ செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்றும், அதற்காக சுமார் 50 தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri