இலங்கையில் TIN இலக்கம் பெறாதவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 மில்லியன் மக்கள் TIN எனப்படும் வரி இலக்கங்களை பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைய 12 மில்லியன் மக்கள் வரி இலக்கங்களை பதிவு பெற்றுள்ளதாக, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கு
இலங்கையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் எண்ணிக்கை சுமார் 17 மில்லியனாக உள்ளதாக புள்ளிவிரபங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், 5 மில்லியன் மக்கள் தங்கள் TIN எண்களைப் பெறவில்லை என்றும், இந்த குழு தானாக முன்வந்து பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் நந்தன குமார கூறியுள்ளார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை அடைய உள்நாட்டு இறைவரி திணைக்களம் பாடுபடும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri