டுவிட்டர் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பினால் குழப்பத்தில் பயனர்கள்
சமூக வலைத்தளமான டுவிட்டரில் விரைவில் ஸ்கிரீன் ஷாட் வசதி நீக்கப்படலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தனது பயனர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தி 'ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்' குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பயனர்களுக்கு இடையூறு
டுவிட்டரில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயன்ற சில பயனர்களுக்கு அந்நிறுவனம் "பாப்-அப்" குறுஞ்செய்தியில், இனி ஸ்கிரீன்ஷாட்களுக்கு பதிலாக குறிப்பிட்ட டுவிட்டின் லிங்கை பகிருங்கள் அல்லது அந்த டுவிட்டை பகிருங்கள் என தெரிவித்துள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் டுவிட்டரில் ஸ்கிரீன்ஷாட் வசதியை நீக்கிய பின் பயனர்கள் இடையூறுகளை சந்திக்காமல் இருக்க அந்நிறுவனம் தற்போதே பயனர்களை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் 'ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்' குறித்து டுவிட்டர் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
