ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கட்டாய நடைமுறை! விரைவில் வர்த்தமானி
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கட்டாய நடைமுறைக்கு வரும் திட்டம் தொடர்பில் அனைத்து முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து முச்சக்கரவண்டிகளும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மீற்றர் டெக்சிகளாக மாற்றப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முச்சக்கரவண்டிகளை மீற்றர் டெக்சிகளாக மாற்றும் திட்டம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்தில் நடைமுறைக்கு வரும்.
அத்துடன் 3 மாத காலப்பகுதிக்குள் நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும்.
மேலும், மீற்றர் இல்லாது வாடகை முச்சக்கரவண்டிகளைச் செலுத்துவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்! கட்டாயமாக்கப்படும் நடைமுறை
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri