முற்றுகையிடப்படவுள்ள கொழும்பு! ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
நாளைய தினம் கொழும்பை முற்றுகையிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முக்கி அறிவிப்பொன்றை வழங்கியுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
அதன்படி ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறினால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு தடையேற்படுத்தப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
நாளை எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை! வெளியானது அறிவிப்பு |
இன்றும், நாளையும் கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்படுவதை அவதானித்துள்ளோம்.
புலனாய்வு தகவல்
இன்றும் நாளையும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிற்காக கொழும்பிற்கு வருவார்கள் என புலனாய்வு பிரிவுகள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமைகளை பொது மக்கள் பயன்படுத்துவதில் பொலிஸாருக்கு பிரச்சினை எதுவுமில்லை.
எனினும் இந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மிகுந்தவையாக மாறினால் பொலிஸார் சட்ட கட்டமைப்பிற்குள் நடவடிக்கை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நிறுத்தப்படும் எரிபொருள் விநியோகம்! மூடப்படும் நிரப்பு நிலையங்கள் - லங்கா ஐஓசி நிறுவனத்தின் விசேட அறிவித்தல் |