இலங்கையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல்
நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்குமான 5000 விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்தில் சேர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான விசேட கொடுப்பனவு நிலுவை பெப்ரவரி மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் அறிவித்துள்ளார்.
மேலும், ஓய்வூதிய திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரினதும் ஓய்வூதிய பற்றுச்சீட்டில் தற்போது இதனை பார்வையிட முடியும்.
புலம்பெயர் ஓய்வூதியம் பெறுவோர் தவிர அனைத்து அரச ஓய்வூதியம் பெறுவோரும் இக் கொடுப்பனவை பெற உரித்துடையவர்களாவர்.
இந்த கொடுப்பனவின் மூலம் சுமார் ஆறு இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் நன்மை அடைவர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan