இலங்கைக்கு வியட்நாம் தொடர்ச்சியான ஒத்துழைப்பு..! கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல்
இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்றுமுன்தினம்(08.05.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கைக்கு வியட்நாம் அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
மேலும், இரு நாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு நலன்கள் சார்ந்த விடயங்களில் இலங்கையின் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பணியாற்ற வியட்நாம் உறுதிபூண்டுள்ளது என ஜெனரல் ஜியாங் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த வியட்நாம் தூதுக்குழுவினர், பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஓய்வுபெற்ற இலங்கை அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் வியட்நாமின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பான் வான் ஜியாங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், பிராந்திய ரீதியில் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ரீதியான ஒரு பலமான கூட்டாண்மையை உருவாக்குவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி News Lankasri