தமிழக முதல்வர் விஜய்க்கு ஜீவன் தொண்டமான் எம்.பி வாழ்த்து..!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ச. ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"தமிழக மக்களின் பேராதரவையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்று, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பிலும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அடுத்த தலைமுறையின் எதிர்ப்பார்ப்பு
இந்த வெற்றி வெறும் அரசியல் சாதனை மட்டுமல்ல. இது புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகள், மக்களின் மாற்றத்துக்கான விருப்பம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
தங்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நீதி, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையுடன் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என நம்புகின்றேன்.

தமிழகத்தின் முன்னாள் தலைவர்களுடன் எமது சமூக நலன் மற்றும் இருநாட்டு தமிழ் மக்களின் முன்னேற்றம் கருதி உருவாக்கப்பட்ட நட்புறவும் ஒத்துழைப்பும், தங்களின் தலைமையிலும் மேலும் வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது.
மக்கள் நலன், முன்னேற்றம் மற்றும் மனிதநேய ஆட்சி என்ற உயரிய இலக்குகளுடன் தங்களின் நிர்வாகம் தமிழ்நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri