ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்னும் 48 மணித்தியாலங்களில் முக்கிய சந்திப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆலோசிப்பதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) நாளை மறுநாள் வியாழக்கிழமை (25.07.2024) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடலை தொடர்ந்து தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
அதேநேரம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.
ரணில் மௌனம்
முன்னதாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் அல்லது செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் திகதி மற்றும் வேட்புமனு ஏற்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதிகளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
அதேவேளை, இந்த தேர்தலில் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடும் நிலையில், ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் மௌனம் காத்து வருகிறார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |