முன்னாள் எம்.பிக்கும் தென்பகுதி இளைஞர்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பு!
தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி - தருமபுரத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
மாகாணசபை முறைமை
இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது மு.சந்திரகுமார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், வடக்கும் கிழக்கும் தெற்கும் இணைந்து ஒரு கருத்தில் மாகாண சபை முறைமை தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற, இளைஞர்களின் எதிர்பார்ப்பாகவே இந்த சந்திப்பு அமைந்துள்ளது.
இந்த 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமையானது அரசியலமைப்பில் குறிப்பிட்டவாறு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இது வடக்கு கிழக்கு தமிழர்களின் கோரிக்கையாக மாத்திரம் அல்லாமல் ஒட்டுமொத்தமான இலங்கை தீவிலே, எல்லா மக்களுக்கும் அந்த அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக்கொள்ளும் வகையில் தென்னிலங்கையில் இருந்து வந்த இளைஞர்கள் ஆரம்பித்திருக்கும் இந்த முயற்சியை வரவேற்கிறோம்.
அவர்களுடைய இந்த முயற்சியில் வடக்கு - கிழக்கு இளைஞர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்பது எமது விருப்பம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan