பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாளைய தினம் தோற்றவுள்ள மாணவர்கள் வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட வைத்திய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கமகே,
மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் திரவ பானங்களை உட்கொள்வது பொருத்தமானது. அதற்கு மிகவும் பொருத்தமான சுத்தமான பானம் தண்ணீர்.
மேலும், பரீட்சைக்கு செல்லும் போது குடை அல்லது வெயில் படாதவாறு மறைப்பதற்கு பொருத்தமான ஒன்றை பயன்படுத்தவும், பரீட்சை காலத்தில் வெயில் படாமல் குளிர்ச்சியான இடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நுளம்புகள் பெருகக்கூடிய பரீட்சை நிலையங்கள் தொடர்பில் புகைபிடித்தல் மற்றும் விசேட துப்புரவு வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன்,452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |