பாடசாலை மாணவர்களின் மனநலம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு
பாடசாலைக்கல்வித்துறையிலும், உயர்கல்வித்துறையிலும் நேர்மையை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மாணவர்கள் சரியான மற்றும் மன ஒருமைப்பாட்டுடன் எளிதாக கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட முடியும் என கல்வி அமைச்சர் சுசில பிரேம்ஜயந்த(A D Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
எனவும் இதன்மூலம் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளை முறையாக முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மாணவர்கள்
இன்று களனி நாகாநந்தா பௌத்த கற்கைகள் நிறுவக வளாகத்தில் நடைபெற்ற உலக வார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலையில் அல்லது உயர் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதை காண முடிகிறது. வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும் விடயத்தை மனதை ஒரு நிலைப்படுத்தி கிரகித்துக் கொள்ள முடியாமையினால் மேலதிக வகுப்புக்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நேரமும் பணமும் செலவாகிறது. இன்றைய உலகத்தில் உள்ள கல்வி திட்டத்தை பார்க்கும் போது கற்பித்தல் செயற்பாடுகள் 30 சதவீதம் ஆக காணப்படுவதுடன் 70 சதவீதம் செயன்முறை கற்றல் நடவடிக்கை காணப்படுகிறது.
இது போன்ற கற்றல் செயற்பாடுகளை நானும் முன்னெடுக்க புதிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |