பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு
பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு நான்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை, செத்சிறிபாய, இரண்டாம் கட்ட கட்டிடத்தின் 13வது மாடியில் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அலுவலக அமைப்பில் இருந்து ஊடக ஒருங்கிணைப்பு மையம் நேற்று முதல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இனிமேல் பின்வரும் புதிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய தொலைபேசி எண்கள்
011 - 2887903
011 - 2887906
011 - 2887907
011 – 2887973
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam