அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய தகவல்
அடுத்த மாதம் முதல் அரசாங்க ஊழியர்களை வழமை போன்று பணிக்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்தளவான பணியாளர்களுடன் நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அமைச்சின் செயலாளர்கள் பலர் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து அரச ஊழியர்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களின் ஊழியர்கள், தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
