தென் கொரிய விமான விபத்து: அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய ஆவணம்
தென் கொரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற விமான விபத்தின் கருப்பு பெட்டி தற்போது அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கருப்பு பெட்டி அதிகம் சேதமடைந்துள்ளமையால் அதில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை அதன் விவரம் தெரியவரலாம் அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி சோய் சங் மோக் (Choi Sang Mok) கூறியுள்ளார்.
பொலிஸார் சோதனை
விபத்துக்குள்ளான விமானத்தின் நிறுவனமான “Jeju Air“ அலுவலகத்தில் தென் கொரிய பொலிஸார் சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் 29 .12.2024அன்று நடந்த குறித்த விபத்து தொடர்பில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதற்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
தாய்லந்திலிருந்து திரும்பிய அந்த விமானத்தில் 181 பேர் இருந்துள்ளனர்.
தகவல் பதிவு
அவர்களில் இருவர் தவிர மற்ற அனைவரும் விபத்தில் பலியாகியுள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு தகவல் பதிவுப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக தென் கொரிய பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், விமானி அறையில் இருந்த மற்றொரு தகவல் பெட்டியின் பதிவுகள் ஒலிக் கோப்பாக மாற்றப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |