கிளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
அரசாங்கத்தின் "கிளீன் ஶ்ரீலங்கா" செயற்திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் இலைக்கஞ்சி, பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பாதையோரங்களில் விற்பனை செய்ய முடியாது என்று பொலிஸார் தமக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் இராணுவ அதிகாரியான அஜித் ஜினசேன தெரிவித்துள்ளார்.
கிளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டம்
அதுருகிரிய பிரதேசத்தில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கிளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டத்தை சீர்குலைப்பதாக அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இனி வரும் காலங்களில் குறைந்த வருமானம் பெறும் ஏராளமானோர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலையும் என்றும் அஜித் ஜினசேன தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |