கொழும்பில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்திய நபரொருவர் கைது
பிரதிப் பொலிஸ் மா அதிபராக நடித்து கொழும்பில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு(Colombo) பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் புகைப்படம், பெயர் என்பவற்றைப் பயன்படுத்தி வட்சப் மூலம் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி இவர் கப்பம் பெற்று வந்துள்ளார்.

பொய்யான முறைப்பாடுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக அச்சுறுத்தியே இந்த நபர் கப்பம் பெற்று வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri