இலங்கை தொடர்பில் உலக வங்கி எடுத்துள்ள முக்கிய முடிவு - ஜோன்ஸ்டன்
இலங்கையில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபிட்சத்தின் தொலைநோக்கு கொள்கை திடத்திற்கு அமைவாக 100,000 கி.மீ வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை உலக வங்கி வரவேற்றுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளதால் , கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் காலநிலைகளுக்கு ஏற்ற வகையில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது.
கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் திட்டமாகவும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடி திட்டமாகவும் செயல்படுத்த உலக வங்கி இந்த தொகையை இலங்கை வழங்குவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கிய சுமார் 3000 கி.மீ நீளமான வீதிகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு கிராமப்புறங்களில் விவசாய பயிர் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் பயிர் சேமிப்பு களஞ்சியங்களையும் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam