வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு
விவசாயத்துறைக்குள் இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில், ஆயிரம் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கி, ஏற்றுமதி சார்ந்த பயிர்களுக்கு வழிகாட்ட விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3000 மில்லியன் ரூபாவில் 1000 மில்லியன் ரூபாவை இதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து பணிப்புரை விடுத்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
அதன்படி, நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு ஆகிய நான்கு பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
அந்த பயிர்களுக்கு மேலதிகமாக, தற்போது சர்வதேச அளவில் தேவையுள்ள பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
