லண்டனில் கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
லண்டனில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு காத்திருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் பாதிப்பின்றி குடும்பங்கள் ஒன்றுக்கூடுவதற்கு தடை விதிக்காமல் தவிர்ப்பதற்கு லண்டனில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் மூன்றாவது தடுப்பூசிகளை உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு வழியுறுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் தொழிலாளர்கள் தங்கள் மதிய உணவு இடைவேளையின் போது அல்லது மற்ற நேரங்களில் தடுப்பூசி போடுவதற்காக மையங்களுக்குச் செல்லுமாறு புதிய தடுப்பூசிகளுக்கு பொறுப்பான அமைச்சர் மேகி த்ரூப் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள போதிலும் கோவிட் தொற்றினால் பலர் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதினை அவதானிக்க முடிகின்றது.
எனினும் தடுப்பூசிகளை தவிர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கருவுறுவதற்கு எதிர்பார்க்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்த வேண்டியவர்கள் உள்ளனர். எனினும் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்வருவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல குடும்பங்கள் இப்போது கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகத் தொடங்கியுள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசிகளை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது, அதனால் அது தீவிர நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கின்றதென்பதனால் உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.