கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலை உணவு வழங்கும் திட்ட விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளும் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பாடசாலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் உணவு வழங்குநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகை 2.4 பில்லியன் ரூபாவாகும்.
இதற்கமைய,
1. மேல் மாகாணம் - 399,418,020.00
2. மத்திய மாகாணம் - 269,900,000.00
3. கிழக்கு மாகாணம் - 350,000,000.00
4. வட மத்திய மாகாணம் - 256,000,000.00
5. வடமேல் மாகாணம் - 221,000,000.00
6. வட மாகாணம் - 164,050,718.00 7.
சப்ரகமுவ மாகாணம் - 182,993,773.00 8.
தென் மாகாணம் - 335,356,317.00
9. ஊவா மாகாணம் - 225,470,000.00
இந்த அனைத்து மாகாணங்களுக்குமான பணத்தொகை 31.01.2023 க்குள் மாகாண கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்குநர்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே பிராந்திய கல்வி அலுவலகங்கள் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.