கொழும்பில் இருந்து வெளியேறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளுக்கும் PCR பரிசோதனை அல்லது ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கொச்சிக்கடை, மீரிகம, நிட்டம்புவ, தொம்பே, ஹங்வெல்ல, இங்கிரிய, பதுரலிய, மீகஹதென்ன, தினியாவல, கொட்டதெனியாவ, அழுத்கம ஆகிய பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் நாடு முழுவதும் விசேட போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு News Lankasri
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri