க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லை என்றால் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.இதன்போது மாணவர்களின் அடையாள அட்டைகள் குறித்த பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பிரதேச செயலகத்திற்கு சென்று மாணவர்களின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிபர்களிடம் வியானி குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சில மாணவர்களுக்காக தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தை சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் பயன்படுத்த முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam