சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை தற்போது பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தால், அவற்றை எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி அட்டைகள்
நாடு முழுவதும் உள்ள 3545 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிபர்கள், வலயக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்று, பரீட்சை பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றை நேரடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களது வீட்டு முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி அட்டைகளில் மாற்றங்கள் அல்லது திருத்தங்களை செய்ய விரும்பினால், பரீட்சைத் திணைக்கள இணையதளத்திற்கு சென்று, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri