பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால் மாணவர்களுக்கு பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், அதனை தவிர்க்க நீர் உள்ளிட்ட இயற்கை பானங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு அறைக்கு செல்லும் போது மாணவர்கள் தண்ணீர் போத்தலை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். தேர்வு எழுதும் போது தண்ணீர் அருந்துவது அவசியமாகும்.
வைத்தியர் அறிவுரை
தண்ணீர் அருந்துவதற்கு எடுக்கும் சில நிமிடங்களை வீணடிப்பதாக நினைக்கலாம், ஆனால் அதைவிட தேர்வு காலம் முழுவதும் ஆரோக்கியமாக தேர்வை எதிர்கொள்ளும் திறனைப் பேண வேண்டும்.

மேலும் இந்த நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இளநீர்,சூப், கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை அருந்த வேண்டும். நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
செயற்கை இனிப்பு பானங்கள் அல்லது பிற செயற்கை பானங்களை பயன்படுத்துவதால் நீர்ச்சத்து குறையும்.
எனவே இயற்கை திரவங்களை தவிர்த்து செயற்கை திரவங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri