ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் இன ரீதியான மற்றும் உருவக் கேலிக்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எயார் பெல்ஜியம் பணியாளர்களினால் இவ்வாறு துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கன் விமான சேவை
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்களில் தொடர்ச்சியாக நிலவி வரும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, பெல்ஜியம் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பயன்படுத்தப்படும் எயார் பெல்ஜியம் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களில் ஶ்ரீலங்கன் விமானப் பணியாளர்கள் துன்பறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர்கள் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள் மற்றும் பணியாளர்கள் உருவக் கேலிக்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குத்தகைக்கு எடுக்கப்பட்ட எயார் பெல்ஜியம் நிறுவனத்தின் விமானங்களில் குறைந்தபட்சம் 4 பணியாளர்கள் அந்த விமான சேவையின் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை
இவ்வாறு பணியாற்றும் எயார் பெலஜியம் விமான சேவையின் பணியாளர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர்கள் இன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவன விமானிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகளின் போதும் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எயார் பெல்ஜியம் விமான சேவையின் பணியாளளர்கள் இலங்கை பயணிகளை இன ரீதியான அடிப்படையில் துன்புறுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri