எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Sapugaskanda Refinery does not produce Super Diesel, 95 Petrol or any other Premium Products.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 20, 2022
It Produces Auto Diesel, 92 Petrol, Heavy Fuel Oil/Furnace Oil, Jet Fuel/Kerosine, Naptha, LPG, Bitumen. pic.twitter.com/NZzFE0RUrN
விமான எரிபொருள் கையிருப்பு
மேலும், இன்றிரவு விமான எரிபொருள் கையிருப்பு தரையிறக்கப்பட உள்ளதாகவும், இந்த இரண்டு சரக்குகள் மூலம் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.