மூன்று இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் 299,934 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2022 டிசம்பரில் 23,407 பேர் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு சென்றுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் வீட்டுப் பணியாளர்கள் 73,781 பேர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
இதேவேளை, 2022 இல், வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 3,789 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது 2021 இல் 5,491 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் ஆகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.