பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
பிரித்தானிய மக்கள் தேசிய சுகாதார சேவையின் இறுதி இலையுதிர்கால பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் 2,800 தளங்களில் 400,000க்கும் மேற்பட்ட சந்திப்புகள் பெப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை வரை கிடைக்கப்பெறவுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவசர அறிவுறுத்தல்
எனவே 16 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதற்கான இறுதி வாய்ப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் கூற்றுப்படி, இதுவரை 17.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த குளிர்காலத்தில் பூஸ்டர் தடுப்பூசியை எடுக்க முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கும் திட்டம் பெப்ரவரி 12ஆம் திகதிக்குப் பின்னர் தொடரும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri