இலங்கையின் தேர்தல்: கனேடிய ஊடகங்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ராஜதந்திரி
இலங்கையில் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்(David Mckinnon) தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய நாட்களில் மற்ற அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, இலங்கையின் நவம்பர் 14 நாடாளுமன்றத் தேர்தல்களின் நம்பமுடியாத முடிவுகள் கனடாவில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.
முக்கியமான விடயங்கள்
ஆனால் ஏனைய காலங்களை காட்டிலும், முக்கியமான விடயங்கள் இடம்பெறும்போது, கனேடிய ஊடகங்கள் இலங்கையை போன்ற நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று டேவிட் மெக்கின்னன் வலியுறுத்தியுள்ளார்.
பல காரணங்களுக்காக, இந்தியப் பெருங்கடல் தீவான இலங்கையை யார் இயக்குகிறார்கள் என்பது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் முக்கியமானது.
கொழும்பு தெற்காசியாவின் பரபரப்பான துறைமுகமாகும். இது சீனா-இந்தியா மற்றும் அமெரிக்கா போட்டியின் மையமாக இருந்து வருகிறது.
அத்துடன் இலங்கை பல தசாப்தங்களாக இன பதற்றம், பிளவுபடுத்தும் அரசியல் மற்றும் மிருகத்தனமான மோதல்களை சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள்; கொண்டுள்ளது.
பல தசாப்த கொந்தளிப்பு
இந்தநிலையில், கடந்த தேர்தலின்போது, வாக்காளர்கள், பல தசாப்தங்களாக கொந்தளிப்புக்கு மத்தியில் நாட்டைக் கொண்டு சென்ற வம்ச அரசியல்வாதிகள், பாரம்பரிய உயரடுக்குகள் மற்றும் இனவெறி கொண்ட அரசியலுக்கு தங்கள் கூட்டுப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனர்.
2022ல் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சியிலிருந்து விரட்டியடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்றுள்ளது.
ஏ.கே.டி என்று சொல்லப்படும் இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தோற்றம் ஒரு மார்க்சிஸ்டாக இருக்கலாம்,
ஆனால் இப்போது அவரை யாரும் பெரிதாக அவரை அவ்வாறு அழைப்பதில்லை என்றும் மெக்கின்னன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் ஆதிக்கம் செலுத்தும் யாழ்ப்பாணத்திலும் கூட, தமிழ் கட்சிகளை முறியடித்து தேசிய மக்கள் சக்தி முன்னுக்கு வந்துள்ளது.
அதேவேளை நடந்துமுடிந்த தேர்தலில் இனவாதச் செய்திகள் அல்லது அடிப்படைக் கருத்துக்கள் இல்லாதது குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்படி இனவாத அரசியல் தங்களுக்கு ஆர்வமாக இல்லை என்பதை இலங்கை வாக்காளார்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |