ட்ரம்ப்பின் வெற்றியால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றிபெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி வரி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து (Switzerland) போன்ற நாடுகள் இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவிற்க்கே அதிகப்படியாக ஏற்றுமதி செய்கின்றன.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி வரியை 20 சதவீதம் வரை அறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்கு வரிவிலக்கு
இவ்வாறு வரி விதிக்கப்படுமானால் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் 0.2% இழப்பு முதற்கட்டமாகவே ஏற்படும் என நம்பப்படுவதோடு நிலைமை தொடருமானால் 1% வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, சீனாவிலிருந்து (China) அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 60% வரியும் ஜேர்மனியிலிருந்து (Germany) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 20% வரியும் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தானியங்கி துறை மற்றும் மருந்தகத் துறை உள்ளிட்ட அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஜேர்மன் தயாரிப்புகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், பிரித்தானியாவிற்கு (UK) மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |