கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய ஏற்பாடு: கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்
வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்றைய தினம் (06.06.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பின் பெறுபேறாக அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே ஏற்படும்.
கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு இருப்பதாகக் காண்பித்து அதனை உற்பத்தியாளர்கள் மீது சுமத்தப் பார்க்கிறார்கள்.
ஆய்வு செய்து திருத்தம்
இன்னும் சில நாட்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானியை அறிவிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோருவர்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் கோழி உற்பத்தி அழிவடையும்.
உடனடியாக தற்போது நிலவும் விலையினை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால் கோழிப் பண்ணைகள் நாட்டிலிருந்து காணாமல் போய்விடும்.
எனவே கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என சுஜிவ தம்மிக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |